செய்திகள்

குடிமராமத்து பணி செய்ததால் மழையால் பயிர்களுக்கு பெரும் சேதம்: கி.வீரமணி

Published On 2017-11-21 12:26 GMT   |   Update On 2017-11-21 12:26 GMT
டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை தாமதமாக செய்ததால் முழுமையாக செய்யவில்லை. இதன் காரணமாக மழையால் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வீரமணி கூறியுள்ளார்.
திருவாரூர்:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகேட்டார். திருவாரூரை அடுத்த பவுத்தர மாணிக்கம் பகுதியில் விவசாய நிலங்களை பார்வையிட்ட பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பருவமழை தொடங்கும் முன்பே குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு வாய்க்கால்களை தூர்வாரி இருக்க வேண்டும். இந்த பணிகளை தாமதமாக செய்ததால் முழுமையாக செய்யவில்லை. இதன் காரணமாக மழை வெள்ளம் வடிய முடியாமல் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு சாதாரண மக்களை பாதிக்கிறது. மேலும் ரேசன் பொருட்களை சரிவர வழங்குவதில்லை. மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து ரேசன் கடைகளை விரைவில் இழுத்து மூடிவிடுவார்கள். நீட் மற்றும் அரசு தேர்வாணைய தேர்வுகளை பிற மாநிலத்தவர் கலந்து கொள்வது தடுக்கப்படவேண்டும். அதில் தேர்வு செய்யப்பட்ட பிற மாநிலத்தவர் 2 ஆண்டுகளில் தமிழ் கற்று கொள்ள வேண்டும். தமிழகத்தில் சரிவர ஆட்சி நடக்கவில்லை. இந்த ஆட்சியை மக்கள் அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் குடவாசல், கீவளூர், வைப்பூர் ஆகிய இடங்களுக்கு சென்று மழை சேதங்களை பார்வையிட்டார்.
Tags:    

Similar News