செய்திகள்

தேச நலன் விரும்புவோர் பா.ஜ.க.வில் சேருகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2017-11-13 13:18 GMT   |   Update On 2017-11-13 13:18 GMT
நாட்டின் வளர்ச்சி, தேச நலன், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை விரும்புகிற அனைவரும் பா.ஜனதாவில் இணைந்து வருகிறார்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
திருச்சி:

திருச்சியில் பா.ஜனதாவில் மாற்று கட்சியினர் சேரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்டம் முகையூர் தொகுதி முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ. கலிவரதன் தலைமையில் 32 பேரும், திருச்சியைச் சேர்ந்த லீமா சிவக்குமார் ஏற்பாட்டில் வக்கீல்கள் கதிரேசன், செந் தில், முகமது ஜான் உள்பட ஏராளமானோர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்.

அவர்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து வர வேற்றார். பின்னர் நிருபர்களிடம் கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜனதா கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ. கலிவரதன் மற்றும் பலர் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர்.

தி.மு.க.வில் இருந்தும் இப்போது பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். இது பா.ம.க.விற்கு சரிவு என்று நான் கருதவில்லை. ஆனால் பா.ஜனதாவிற்கு வளர்ச்சி என்று தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி, தேச நலன், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை விரும்புகிற அனைவரும் பா.ஜனதாவில் இணைந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்டத்தலைவர் தங்க ராஜைய்யன், மண்டல பொறுப்பாளர்கள் சிவசுப்ரமணியன், கருப்பு முருகானந்தம், பொருளாளர் கையிலை ஆர்.வி.எஸ்.செல்வக்குமார், லீமா சிவக்குமார், வக்கீல் அணி மாநில இணைச்செயலாளர் பன்னீர் செல்வம், செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், சரவணன், இளைஞரணி கவுதம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News