search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன். ராதாகிருஷ்ணன்"

    • பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

    கன்னியாகுமரி:

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் வருகிறார். இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையின் மூலமாக கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    பிரதமர் மோடி 18-ந் தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், 19-ந் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கிறார். சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்ததை வரவேற்கிறேன்.


    பிரதமர் மோடி ஆளுமையை ஏற்று வரும் அனைத்து கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் சரி. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

    தமிழகத்தை பொறுத்த மட்டில் தி.மு.க.வை மிஞ்சும் அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சாதனைகளை செள்துள்ளது. அயல்நாட்டு தொடர்பு முதல் அடித்தட்டு மக்கள் வரை பல்வேறு வளர்ச்சிகளை செய்துள்ளது.

    கோடிக்கணக்கான திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார். இந்த தேர்தலை பொருத்தமட்டில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

    விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் விஜயதரணி போட்டியிடுவாரா? என்பது குறித்து தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான்கு வழிச்சாைல திட்டத்தை முடிக்க முழு வீச்சில் தொடர்ந்து பாடுபடுவேன்
    • இந்தச் சாலை அமைக்கப்படக் கூடாது என மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தின் பிரதான சாலையாக இருக்கும் காவல்கிணறு- திருநெல்வேலி, ஆரல்வாய் மொழி-நாகர்கோவில் வழி யாக திருவனந்தபுரம் செல் லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    இதனை உணர்ந்து, இருக் கின்ற தேசிய நெடுஞ்சாலை என்.எச்.47-க்கு மாற்றாக புதிய தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்க திட்டமிட்டு முன் னாள் பிரதமர் வாஜ்பாய் அரசின் அனுமதியும் பெற்று, சாலைக்கான முழு விவரமான திட்ட அறிக்கை தயாரிக்க ஏற்பாடு செய் தேன். ஆனால் 2004-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதன் பின்னால் வந்த காங் கிரஸ் அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு இருந்தது.

    2014-ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி மீணடும் என்னை சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சராக ஆக்கி னார். கோமா நிலையில் பத்தாண்டு காலம் கிடப்பில் கிடந்த நான்கு வழிச்சாலை பணிகள் மீண்டும் ரூ.4 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் முடுக்கி விடப்பட் டன. நிலம் கையகப்படுத்து தல், சாலை அமைத்தல் போன்ற அனைத்தும் ஜெட் வேகத்தில் நிறைவேற ஆரம் பித்தன.

    இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி வாய்ப்பை இழந்தேன். ஆனால் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை துரிதமாக முடிக்க திட்டமிட்டார்கள்.ஆனால் மாநில அரசு இத் திட்டத்திற்காக கொடுக்க வேண்டிய மண், மணல், ஜல்லி போன்ற பொருட் களை கொடுக்காமல் வேலையை நிறுத்துவதில் ஆர்வம் காட்டினார்கள். இந்தச் சாலை அமைக்கப் படக்கூடாது என திட்டமிட்டு 2019 ஏப்ரல் 22-ந்தேதி மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் வழக் குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் இத்திட்டத் தை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சாலை அமைக்க ஜல்லி, மணல் போன்ற கனிமப் பொருட்கள் கிடைக்காத காரணத்தால் திட்டத்தை கைவிட்டு விட்டு சென்றனர். தற்போது மீண்டும் இந்த திட்டத்தை செயல் வடிவத் திற்கு கொண்டு வந்து நிறை வேற்றுவதற்கான ஆரம்ப நிலையிலிருந்து இப்பணியை தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்தாக வேண்டும். இதனை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து முறையிட்டேன். இத்திட்டத் திற்கான முழு ஒத்துழைப் பையும் தர பிரதமர் நரேந்திர மோடி அரசு தயாராக உள்ளது என நிதின் கட்கரி தெளிவுபடுத்தினார்.

    எனவே இத்திட்டம் கூடிய விரைவில் தொடங்கப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என்று நம்புகிறேன். இப்பணியை முடிக்க முழு வீச்சில் தொடர்ந்து செயல்படுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×