search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின், ஸ்ரீரங்கத்தில் தெய்வத்தை அவமதித்து விட்டார்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    மு.க.ஸ்டாலின், ஸ்ரீரங்கத்தில் தெய்வத்தை அவமதித்து விட்டார்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

    நெற்றியில் இடப்பட்ட மத அடையாளத்தை ஸ்டாலின் அழித்ததால் பகிரங்க மன்னிப்பு கேட்ட வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். #ponradhakrishnan #mkstalin

    நாகர்கோவில்:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். ரெங்கா ரெங்கா கோபுரம் அருகே அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    தேர்தல் வெற்றிக்காக ஸ்ரீரெங்கம் கோவிலில் சுக்கிரயாகம் நடத்தியதாக தகவல்கள் பரவியது.

    இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ரெங்க நாதருக்கு சாத்தப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டதோடு, ரெங்கநாயகி அம்மையாருக்கான பிரசாதம், மு.க. ஸ்டாலின் நெற்றியில் பூசப்பட்டுள்ளது. இதை மு.க. ஸ்டாலின் அழித்திருக்கிறார். இது மிகவும் வருந்தத்தக்க செயல்.

    நெற்றியில் இடப்பட்ட மத அடையாளத்தை ஸ்டாலின் அழித்ததை ஏற்க முடியாது. இது தெய்வதிற்கு இழைக்கப்பட்ட அவமானம். இதற்காக மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    நெற்றியில் இடப்பட்ட அடையாளத்தை ஸ்டாலின் அழித்தபோது அதை பார்த்த பூசாரிகள், பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? யாரை நம்ப வைக்க அவர், இந்த வேடம் போடுகிறார்.

    மு.க.ஸ்டாலின் மத அடையாளத்தை அழித்ததால் இனி அவரை எந்த கோவிலுக்குள்ளும் அனுமதிக்கக்கூடாது. இதற்கான பட்டியலில் அவரது பெயரையும் சேர்க்க வேண்டும்.

    மேலும் ஸ்டாலினை கோவிலுக்குள் அனுமதிக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் கூட குன்றக்குடி அடிகளார் திருநீறு அணிவித்தபோது அதை அழிக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இல்லையென்று பகிரங்கமாக கூறியவர் கூட இதுபோன்ற செயலை செய்யவில்லை.


    ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஸ்டாலின் செய்த தவறுக்காக அங்குள்ள சாமிக்கு பரிகார பூஜை செய்ய வேண்டும். இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். ஆகம விதிகள் மீறப்பட்டதா? என்பதையும் விளக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #mkstalin

    Next Story
    ×