செய்திகள்

அடுத்தாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் கவுன்சிலிங்: தமிழக அரசு

Published On 2017-11-09 11:41 GMT   |   Update On 2017-11-09 11:42 GMT
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்தாண்டு முதல் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் மொத்தமாக மாணவர் சேர்க்கை நடத்துவதால் அதிக பொருட்செலவு, மனிதவளம் தேவைப்படுவதாக கூறப்பட்டது.

ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என இரண்டாண்டுகளுக்கு முன்னதாகவே கோரிக்கை எழுந்தது. ஆனால், அதற்கான நடைமுறைகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற எம்.இ, எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ கவுன்சிலிங் ஆன்லைன் முறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதனையடுத்து, அடுத்தாண்டு முதல் பொறியியல் கவுன்சிலிங் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொறியியல் சேர்க்கை செயலாளாராக இருந்த இந்துமதி மாற்றப்பட்டு ரைமண்ட் உதிரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News