செய்திகள்

கும்பகோணம் கோர்ட்டில் சிலை கடத்தல் மன்னன் கபூர் ஆஜர்

Published On 2017-10-13 10:28 GMT   |   Update On 2017-10-13 10:28 GMT
சிலை கடத்தல் வழக்கில் சந்திரகபூர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர் ஆனார். விசாரணையை 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கும்பகோணம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2008 -ம் ஆண்டு 20 சிலைகள் திருட்டு போனது. இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 2 பேர் இறந்து விட்டனர். பிச்சுமணி என்பவர் அப்ரூவராக மாறினார்.

இதையடுத்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகபூரை போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிச்சாமி, சஞ்சீவிஅசோகன், சிவக்குமார், கலியபெருமாள், ரெத்தினம், கந்தசாமி, அருணாசலம், ஸ்ரீராம், பார்த்தீபன், புழல் சிறையில் உள்ள சென்னை பாக்கியகுமார் ஆகிய 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அதே போல் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் சரகம் ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோயிலில் கடந்த 2008- ம் ஆண்டு 8 சிலைகள் திருட்டு போனது. இது தொடர்பாகவும் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வருகிற 26 -ந் தேதிக்கு ஒத்தி வைத்து நேற்று உத்தர விட்டார்.
Tags:    

Similar News