search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை கடத்தல் வழக்கு"

    • சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.
    • 7 பேரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கும்பகோணம்:

    அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சாமி சிலைகள் மாயமானது. இந்த சிலைகள் மாயமானது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாயமான சிலைகள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    இந்த சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.

    இதனைத்தொடர்ந்து இந்த சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சிலை கடத்தல் மன்னன் அமெரிக்காவில் வசித்து வந்த சுபாஷ் சந்திர கபூர் (வயது 73), சென்னையை சேர்ந்த சஞ்சீவி அசோகன் (60), பாக்கியகுமார் (50), மதுரையை சேர்ந்த மாரிச்சாமி (65), ஸ்ரீராம் என்கிற சுலோகு (52), பார்த்திபன் (55), சிதம்பரத்தை சேர்ந்த பிச்சுமணி (60) ஆகிய 7 பேரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் பிச்சுமணி அப்ரூவரானார். மீதம் உள்ள சுபாஷ் சந்திரகபூர், சஞ்சீவிஅசோகன், மாரிச்சாமி, பாக்கியகுமார், ஸ்ரீராம் (என்கிற) சுலோகு, பார்த்திபன் ஆகிய 6 பேர் மீதான வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இதில் ஒவ்வொரு கட்ட விசாரணையின்போதும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ் சந்திர கபூரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    இதற்காக சுபாஷ்சந்திரகபூர் உள்பட 6 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். மாலையில் நீதிபதி சண்முகப்பிரியா தீர்ப்பை வாசித்தார்.

    இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சுபாஷ்சந்திரகபூர், சஞ்சீவி அசோகன், பாக்கியகுமார், மாரிச்சாமி, ஸ்ரீராம் என்கிற சுலோகு, பார்த்திபன் ஆகிய 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுபாஷ்சந்திரகபூருக்கு ரூ.4 ஆயிரமும், மீதமுள்ள 5 பேருக்கு தலா ரூ.8 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஏன் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது? என தமிழக அரசு இன்று விளக்கமளித்துள்ளது. #IdolTheftCase #CBI
    சென்னை:

    சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொன் மாணிக்க வேல் தனது விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

    தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரான சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டதை அடுத்து, ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்பட்டது என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான பதிலை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளது.

    அதில், பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக வழக்கு தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. டிஜிபி நடத்தும் ஆய்வுக் கூட்டங்களுக்கும் வருவது இல்லை. சிலை கடத்தல் முறைகேடில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளதால், நியாமான விசாரணை நடக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிர்பந்தத்தால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கும்பகோணம் கோர்ட்டில் ஏற்கனவே நடந்து வரும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐம் விசாரிக்காது, மற்ற வழக்குகளை விசாரிக்கும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. #IdolTheft #CBI
    சென்னை:

    தமிழக கோவில்களில் காணாமல் போன சிலைகள் தொடர்பான வழக்குகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்க வேல் விசாரித்து வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவரது விசாரணையில் திருப்தி இல்லை என சென்னை ஐகோர்ட்டில் கூறிய தமிழக அரசு அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தது.

    இதற்கான அரசாணையும் இன்று பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கும்பகோணம் கோர்ட்டில் ஏற்கனவே நடந்து வரும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்காது என தமிழக அரசு இன்று ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. மற்ற சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் சிபிஐ வசம் விரைவில் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    ×