செய்திகள்
அரசு - தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான காட்சி.

அன்னூர் அருகே அரசு - தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து: டிரைவர்கள் உள்பட 30 பேர் காயம்

Published On 2017-09-25 04:37 GMT   |   Update On 2017-09-25 04:37 GMT
அன்னூர் அருகே அரசு - தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
அன்னூர்:

கோவையில் இருந்து இன்று காலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ஜோதிபாசு (வயது 48). என்பவர் ஓட்டிச் சென்றார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

பஸ் 7.30 மணியளவில் அன்னூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்றது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் அரசு பஸ் டிரைவர் ஜோதிபாசு, தனியார் பஸ் டிரைவர் கருப்பசாமி (42) உள்பட 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 7 பேரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், லேசான காயம் அடைந்த 23 பேரை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அன்னூர் டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான பஸ்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.


Tags:    

Similar News