செய்திகள்
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்ட போது எடுத்த படம்.

தடையை மீறி போராட்டம்: வைகோ கைது

Published On 2017-08-21 07:58 GMT   |   Update On 2017-08-21 07:58 GMT
சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தவறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி சென்னை சேப்பாக்கத்தில் ம.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்து இருந்தார்.

ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.

அதன்படி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம் நடத்துவதற்காக வைகோ, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்தார்.


போராட்டம் நடத்த அனுமதி வழங்காததால் வைகோ உள்ளிட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேசமூர்த்தி, மணிகண்டன், கழக குமார், வளையாபதி, ஜீவன், தென்றல் நிசார், பூங்கா நகர் ராம்தாஸ், அம்மா முருகன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
Tags:    

Similar News