செய்திகள்

ராமேஸ்வரம்-அயோத்தி இடையே புதிய ரெயில் சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி

Published On 2017-07-27 07:43 GMT   |   Update On 2017-07-27 07:43 GMT
ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி செல்லும் புதிய விரைவு ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இதையடுத்து, மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு திட்டங்களின் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும் பசுமை ராமேஸ்வரம் திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News