செய்திகள்

பாபநாசம் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 18 அடி உயர்வு

Published On 2017-06-28 10:25 GMT   |   Update On 2017-06-28 10:25 GMT
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று 43.14 அடியாக இருந்த சேர்வலாறு அணைநீர் மட்டம் இன்று காலை வரை ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 61.15 அடியாக உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 84 மில்லிமீட்டர் மழையும், குண்டாறு பகுதியில் 81 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. பாபநாசம் அணைபகுதியில் 55 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

இதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதனால் நேற்று போல இன்றும் ஒரே நாளில் 6 அடி நீர்மட்டம் உயர்ந்து இன்று 44.90 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணைநீர் மட்டம் நேற்று 43.14 அடியாக இருந்தது. இன்று காலை வரை ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 61.15 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைப் பகுதியில் 16 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அங்கு அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நீர்மட்டம் 32.75 அடியாக உள்ளது.

செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 57 அடியாக இருந்தது. இன்று காலை வரை ஒரே நாளில் 16 அடி உயர்ந்து 73 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

இதுபோல ராமநதியில் 55 அடியும், கடனா நதி-52, கருப்பாநதி 34.78, வடக்கு பச்சையாறு 3.25, நம்பியாறு-6.77, கொடு முடியாறு 7.00 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

கருப்பாநதி - 16.5

ஆய்க்குடி - 15.2

பாளை - 7.4

நெல்லை - 5

சிவகிரி - 4

Tags:    

Similar News