செய்திகள்

பழனி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 10-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2017-06-25 13:01 GMT   |   Update On 2017-06-25 13:01 GMT
பழனி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 10-ம் வகுப்பு மாணவி பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனி:

பழனி, ஆயக்குடி, சின்னகலையம்புத்தூர், கீரனூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே இந்த காய்ச்சல் கண்டவர்கள் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பழனி அருகே ஆயக்குடி ஓபுலாபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. கூலித் தொழிலாளி. இவரது மகள் ஈஸ்வரி. (வயது 15). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆயக்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிலைமை மோசமானதால் உடனடியாக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேரக்கப்பட்டார. அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலுக்கு பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏற்கனவே 14 பேர் இறந்துள்ளனர். தற்போது ஈஸ்வரியோடு சேர்த்து சாவு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

எனவே மருத்துவ குழுவினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்த வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News