செய்திகள்

புழல் சிறையில் மேலும் ஒரு கைதி தற்கொலை

Published On 2017-05-29 23:49 GMT   |   Update On 2017-05-29 23:49 GMT
திருவள்ளூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் குமார் என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் போரூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் குமார் என்ற இளைஞர் புழல்சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவறைக்கு சென்ற செந்தில் குமார் அங்கேயே தனது லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த மே 8-ஆம் தேதி இளைராஜா என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அண்ணா நகரில் ஆசிரியை நிவேதா என்பவரை கார் ஏற்றி கொலை செய்ததாக தீயணைப்பு துறை ஊழியர் இளைராஜா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த நாளே சிறை கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்வாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு புழல் சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து வருவதால், இதற்கு அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Tags:    

Similar News