செய்திகள்

புதுவை சட்டசபையில் 25-ந்தேதி பட்ஜெட் தாக்கல்

Published On 2017-05-14 10:40 GMT   |   Update On 2017-05-14 10:40 GMT
புதுவை அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 16-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையாற்றி கூட்ட தொடரை தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:

புதுவை அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 16-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையாற்றி கூட்ட தொடரை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து 17-ந்தேதி சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. 18 முதல் 21-ந்தேதி வரை 4 நாட்கள் சபை நிகழ்ச்சிகள் நடைபெறாது.

இதன்பின் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. 25-ந்தேதி நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர்  ஜூன் மாதம் இறுதி வரை நடைபெறும். இதில் துறை ரீதியான விவாதங்கள் நடக்கிறது. மொத்தம் 20 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி இன்று சட்டசபை கேபினட் அறையில் துறை செயலர்களின் ஆலோசனை கூட்டம் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதில் தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News