செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே டாஸ்மாக் கடைக்கு மதுபானம் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த மக்கள்

Published On 2017-04-30 16:12 GMT   |   Update On 2017-04-30 16:12 GMT
ஒட்டன்சத்திரம் அருகே டாஸ்மாக் கடைக்கு மதுபானம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கன்னிவாடி:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மூலசத்திரத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இப்பகுதியில் பள்ளி, கோவில் இருந்ததால் இக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். தாசில்தார் மிருளாளிணி, ஒட்டன்சத்திரம் போலீசார் இனி கடை திறக்கப்படாது என உறுதியளித்ததால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அன்றிலிருந்து கடை திறக்கப்படாமல் இருந்தது. நேற்று மூடப்பட்ட கடைக்கு மது பாட்டில்களை இறக்க ஒரு லாரி வந்தது. இதை அறிந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த லாரியை சிறைபிடித்தனர். தகவலறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இங்கு விற்பனை நடக்காது எனக் கூறி லாரியை திருப்பி அனுப்பினர்.

அதன்பிறகே மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News