செய்திகள்

சேலத்தில் இன்ஸ்பெக்டர் தாக்கியதால் என்ஜினீயர் தற்கொலை முயற்சி

Published On 2016-08-07 16:24 GMT   |   Update On 2016-08-07 16:24 GMT
சேலத்தில் வாகன சோதனையில் ஏற்பட்ட தகராறில் இன்ஸ்பெக்டர் தாக்கியதால் என்ஜினீயர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
சேலம்:

சேலம் அருகே உள்ள அரியானூர் கல்பாரப்பட்டி சேவாம்பாளையத்தை  சேர்ந்தவர் முனியகவுண்டர் (வயது 49).  இவரது மகன் பிரபாகரன் (வயது 27). என்ஜினீயரான இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது  வங்கி தேர்வில் கலந்து கொள்ள விடுமுறை எடுத்து விட்டு வீட்டில் இருந்து படித்து வருகிறார்.

நேற்று இரவு இவரும், அவரது நண்பர்கள் ஆனந்த், அன்பழகன் மற்றும் சிலரும் 2  மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்று விட்டு  கல்பாரப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர்  தண்டபாணி மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்து  கொண்டிருந்தனர். இவர்களை பார்த்த இன்ஸ்பெக்டர் தண்டபாணி  பிரபாகரனையும், அவரது நண்பர்களையும் அழைத்து விசாரித்தார்.

பின்னர் பிரபாகரன் வேகமாக  லைசென்ஸ் இல்லாமல்  வண்டி ஓட்டி  வந்ததாகவும் கூறி வழக்குப்பதிவு செய்தார். இதற்கு நோட்டீஸ் வழங்கி அபராதமாக ரூ.900 பெற்று கொண்டார். அப்போது இன்ஸ்பெக்டர் தண்ட பாணிக்கும், பிரபாகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பிரபாகரன்  தாக்கப்பட்டார்.

பிறகு பிரபாகரனும், அவரது நண்பர்களும் வீடு திரும்பினர்.  இந்த நிலையில்  சிறிது நேரத்தில் பிரபாகரன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதை அறிந்த அவரது பெற்றோர் உடனே பிரபாகரனை தூக்கி சென்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.                                                                                     

Similar News