செய்திகள்
சர்பராஸ் அகமது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் ரெடி- பாகிஸ்தான் கேப்டன்

Published On 2019-09-18 14:49 GMT   |   Update On 2019-09-18 14:49 GMT
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மற்ற அணிகளுக்கு சவாலாக விளங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெற்ற பின் டெஸ்ட் போட்டியில் திணறி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது போன்று டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை.

இந்நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் தயார் என பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘மிஸ்பா, யூனிஸ் கான் ஆகியோரின் ஓய்வுக்குப்பின் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்றம் இறக்கமாகவே எங்கள் ஆட்டம் இருந்து வருகிறது. உலக சாம்பியன்ஷிப்பில் மற்ற அணிகளுக்கு நாங்கள் சவால் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன்.

மிஸ்பா, யூனிஸ்கான் இல்லாமல் நாங்கள் திணறினோம். அதன்பின் அணியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டோம். தற்போது எங்களது பேட்ஸ்மேன்கள் அந்த இடத்தை நிரப்பி, பொறுப்பை கையில் எடுத்துக் கொள்வார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News