search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Test Championship"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்தது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது.

    முதலாவது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்த இந்தியா மழையால் டிரா ஆனது. இதனால் இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 1 டிரா கண்டுள்ள இந்திய அணி 2வது இடத்துக்கு (66.67%) சரிந்துள்ளது.

    பாகிஸ்தான் ஒரு ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி (100%) முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (54.17%) 3-வது இடத்திலும், இங்கிலாந்து (29.17%) 4-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி (16.67%) 5-வது இடத்திலும், உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம்.
    • ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இந்தியா தோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சர்ச்சை கருத்துகளும் பரவிய வண்ணம் உள்ளது.

    இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது. ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளுக்கு பிறகுதான் பிளே ஆஃப் விளையாட முடியும்.

    ஆனால், உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம்.

    ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
    • சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 49 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் போலண்ட் இந்தியாவின் முக்கிய இரு வீரர்களை அவுட்டாக்கினார்.

    அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரகானே 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷர்துல் தாக்குர் டக் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்ரீகர் பரத் 23 ரன்னில் வெளியேறினார். உமேஷ் யாதவ் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "அமைதியே மாபெரும் பலத்தின் தோற்றுவாய்" என்று லாவோட்சுவின் பொன்மொழியை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
    • இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து களமிறங்கிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா நேற்று களமிறங்கியது.

    தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா களமிறங்கினர். கில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். போலன்ட் பந்துவீச்சில் கெமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து கில் அவுட் ஆனார். ஆனால், கிரீன் பிடித்த கேட்ச் சர்ச்சைக்குள்ளானது. பந்து தரையில் பட்டது போல இருந்தது. அதேவேளை, பந்து தரையில் படுவதற்குள் கிரீனின் கைவிரல் பந்திற்கு மேல் இருந்தது போலும் காட்சியளித்தது. இதன் காரணமாக 3ம் நடுவர் அவுட் கொடுத்தார். இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் கிரீன் நோக்கியும், ஆஸ்திரேலிய வீரர்கள் நோக்கியும் 'மோசடி... மோசடி... மோசடி' என கூச்சலிட்டனர். இதனால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று (5-ம் நாள்) ஆட்டத்தின் இறுதிநாள் என்ற நிலையில் இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜடேஜா, ரகானே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
    • ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட், கிரீன், ஸ்டார்க், நாதன் லியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.

    டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதல் சீரான இடைவெளியில் இந்தியாவின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    ரோகித் சர்மா 15 ரன்னும், சுப்மான் கில் 13 ரன்னும், புஜாரா- விராட் கோலி தலா 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ஜடேஜா, ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்தியா 31 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 121 ரன்களை எடுத்தது.

    5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 ரன்களை கடந்தது. ரகானே 29 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஜடேஜா 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, ஸ்ரீகர் பரத் களமிறங்கினார். 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

    இந்நிலையில், இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 38 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பில் 151 ரன்களை எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட், கிரீன், ஸ்டார்க், நாதன் லியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
    • முகமது சமி ஓவரில் ஸ்மித் இந்த ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகியது.

    தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 0 ரன்னிலும் டேவிட் வார்னர் 43 ரன்னிலும் லாபுசேன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ட்திராவிஸ் ஹெட் - ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்மித் ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. முகமது சமி ஓவரில் இந்த சம்பவம் அரங்கேறியது. அவர் தொடர்ந்து அவுட் ஸ்விங் வீசிய நிலையில் அந்த பந்தை இன் ஸ்விங் செய்தார். அதனை ஸ்மித் பேட்டில் வாங்காமல் விட்டுவிட்டார். அப்போது தான் அவர் அந்த ரியாக்ஷன் கொடுத்தார். ஓ.... இன் ஸ்விங் என கை சைகையில் காட்டினார்.

    இவரது ரியாக்ஷன் அடிக்கடி வைரலாகி வருவதுண்டு அதுபோல இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வாஷிங்டன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை ( புதன் கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. ஐ.சி.சி. கோப்பையை கைப்பற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் ஆடும் லெவனில் இருப்பார் என அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.
    • கூடுதல் பவுன்சை தான் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விரும்புவார்கள்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.

    இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். புதிய பந்தை அப்படியே கொண்டு செல்லக்கூடாது. முதல் 10 முதல் 15 ஓவர்களுக்கு பந்து அதிகளவில் ஸ்விங் ஆகும். அந்த குறிப்பிட்ட ஓவர்களில் கூடுதல் ரன்களை கொடுக்க வேண்டாம். அதேபோன்று பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டாம். அமைதியாக இருங்கள்.

    ஏனெனில் கூடுதல் பவுன்சை தான் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விரும்புவார்கள். இந்த மைதானத்தின் தன்மை எப்போதுமே ஆசிய நாடுகளுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் இந்த மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் தான் அந்த சூழல் ஏற்படும். ஆனால் நாம் ஜூன் மாதத்திலேயே இங்கு வந்துள்ளதால் மைதானத்தின் தட்பவெட்பமும் சரி, சூழலும் சரி வித்தியாசமாக இருக்கும்.

    எனவே பந்து ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடையாமல் விக்கெட்டை எடுக்கும் கட்டுக்கோப்புடன் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டும். எந்த ஒரு இடத்திலும் கவனக் குறைவு ஏற்படாமல் வெற்றி முனைப்புடன் பந்துவீச வேண்டும்.

    என வாசிம் அக்ரம் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓவல் மைதானத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியம்.
    • மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் ஆறாவது நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்க உள்ளது. இதில் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த மைதானம் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    ஓவல் மைதானத்தில் 1880 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.

    ஓவல் மைதானத்தில் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கிலாந்து அணி 43 போட்டிகளிலும், வெளிநாட்டு அணிகள் 23 போட்டிகளிலும் வென்றுள்ளன. இந்த மைதானத்தில் டாஸ் வென்ற அணிக்கான வெற்றி வாய்ப்பு 34.62 சதவீதம் (36 போட்டிகள்). அதே போல முதலில் பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 35.58 சதவீதம் (37 போட்டிகள்). இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 27.88 சதவீதம் என உள்ளது.

    டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்கள் (ஜூன் 7, 8 மற்றும் 9) ஆகிய தேதிகளில் ஓவலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நான்கு மற்றும் ஐந்தாவது நாள் மதியம் மற்றும் மாலை நேரத்தில் மழை பொழிவு இருக்கலாம் எனவும் தெரிகிறது. மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் ஆறாவது நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆடுகளம் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் இங்கிலாந்தில் வானிலை முறையாக கணிக்க முடியாத சூழல் இருப்பதே காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியம்.

    அதே போல ஆடுகளம் கடைசி 2 நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது களத்தில் பந்து பவுன்ஸ் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இருக்கும் பவுன்ஸ் சூழல் ஓவலில் இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதை இந்திய அணி வீரர்கள் ஓவலில் தங்களது முதல் வலை பயிற்சி மேற்கொண்ட போதே எதிர்கொண்டனர்.

    இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமாக சாதனை வைத்துள்ள ஒரே மைதானமாக ஓவல் உள்ளது. 38 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் 44 ரன்களுக்கு (இங்கிலாந்து அணிக்கு எதிராக 1896) ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாகி உள்ளது.

    இந்திய அணி 1936 முதல் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றி, 5 தோல்வி மற்றும் 7 போட்டிகள் சமனில் முடித்துள்ளது. கடந்த 2021-ல் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இதே மைதானத்தில் வென்று அசத்தி உள்ளது.

    கடந்த 2017 முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.