செய்திகள்

கேப்டவுன் டெஸ்ட் - 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

Published On 2019-01-06 11:32 GMT   |   Update On 2019-01-06 11:32 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதுடன், தொடரையும் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா. #SAvPAK #DuPlessis
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா டு பிளிசிஸ் (103), மார்கிராம் (78), பவுமா (75), டி காக் (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 431 ரன்கள் குவித்தது.



254 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத் 61 ரன்களும், ஆசாத் ஷபிக் 88 ரன்களும், பாபர் ஆசம் 72 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து, 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா இன்று களமிறங்கியது. 9.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 2 - 0 என தொடரையும் கைப்பற்றி அசத்தியது. டு பிளசிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 11ம் தேதி நடைபெறுகிறது. #SAvPAK #DuPlessis
Tags:    

Similar News