search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாவது டெஸ்ட்"

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜேசன் ஹோல்டரின் சிறப்பான பந்துவீச்சினால் வங்காளதேசம் 149 ரன்னுக்கு சுருண்டது. #WestIndies #Bangladesh
    சிட்டகாங்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிங்ஸ்டன் நகரில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வெஸ்ட்இண்டீஸ் தொடக்க வீரர் பிராத்வெயிட் அசத்தலாக ஆடி சதம் அடித்தார். அவர் 110 ரன் எடுத்து அவுட் ஆனார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் இழப்புக்கு 295 ரன் எடுத்து இருந்தது. ஹெட்மெர் 84 ரன்னுடனும், சேஸ் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஹெட்மேர் 86 ரன்களிலும், சேஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 354 ரன்களில் ஆல் அவுட்டானது.  வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹாசன் 5 விக்கெட்டும், அபு ஜெயத் 3 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம்  2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீசின் துல்லியமான பந்து வீச்சில் வங்காளதேச வீரர்கள் நிலைகுலைந்தனர்.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 47 ரன்களில் அவுட்டானார். ஷகிப் அல் ஹசன் 32 ரன்களிலும்,முஷ்பிகுர் ரஹிம் 24 ரன்களும் எடுத்து வெளியேறினர். வங்காளதேச அணியின் 5 வீரர்கள் டக் அவுட்டாகினர்.இதனால் வங்காளதேசம் அணி தனது முதல் இன்னிங்சில் 46 ஓவரில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், கேப்ரியல், பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    ஆட்ட நேர இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 19 ரன் எடுத்துள்ளது. #WestIndies #Bangladesh
    ×