search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - 423 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது நியூசிலாந்து
    X

    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - 423 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது நியூசிலாந்து

    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் 423 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது நியூசிலாந்து. #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 178 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்களில் சுருண்டது. போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    74 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து, 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் லாதம் 176 ரன்னில் அவுட்டானார். நிக்கோல்ஸ் 162 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை அணியின் 2வது இன்னிங்சில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். சண்டிமால் 56 ரன்னிலும், மெண்டிஸ் 67 ரன்னிலும் அவுட்டாகினர். ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அதன்பின், ரோஷன் சில்வா 18 ரன்னிலும், நிரோஷன் டிக்வெலா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது. தில்ருவான் பெராரா 22 ரன்னும், சுரங்க லக்மால் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.



    இந்நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி மேலும் 5 ரன்கள் சேர்த்த நிலையில் 236 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது குறிப்பிடத்தக்கது. #NZvSL
    Next Story
    ×