செய்திகள்

கேப் டவுன் டெஸ்ட் : முதல் இன்னிங்சில் டு பிளசிஸ் சதத்தால் 431 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா

Published On 2019-01-05 13:38 GMT   |   Update On 2019-01-05 13:38 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் டு பிளசிஸ் சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவித்துள்ளது. #SAvPAK #DuPlessis
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால், பாகிஸ்தான் 75 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய ஷான் மசூத் 44 ரன்களும், கேப்டன் சர்பிராஸ் அகமது 56 ரன்களும் எடுத்தனர்.இறுதியில், பாகிஸ்தான் 177 ரன்னில் ஆல்அவுட் ஆனது.



தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 4 விக்கெட்டும், ஸ்டெயின் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும், பிலாண்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் 78 ரன்னிலும், டு பிளசிஸ் சிறப்பாக ஆடி சதமடித்து 103 ரன்னிலும், டெம்பா பவுமா 75 ரன்னிலும், குயிண்டான் டி காக் 59 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் சார்பில் மொகமது அமிர், ஷஹின் அப்ரிடி தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். #SAvPAK #DuPlessis
Tags:    

Similar News