செய்திகள்

ஆஸ்திரேலியாவுடன் 20 ஓவர் போட்டி- ரோகித்சர்மா புதிய சாதனை படைப்பாரா?

Published On 2018-11-21 06:27 GMT   |   Update On 2018-11-21 06:27 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித்சர்மா புதிய சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார். #AUSvIND #RohitSharma
பிரிஸ்பேன்:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று பிற்பகல் நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவர் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் 73 இன்னிங்சில் 2271 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ரோகித்சர்மா 80 இன்னிங்சில் 2207 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.

குப்தில் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்க ரோகித்சர்மாவுக்கு 65 ரன்களே தேவை. இன்றைய ஆட்டம் அல்லது இந்த தொடரில் குப்திலை முந்த அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ரோகித்சர்மா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அதிரடியாக ஆடினார். 2-வது போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தார்.

இதேபோல இந்திய அணி கேப்டன் விராட்கோலியும் ரன்களை குவித்தால் புதிய சாதனை படைப்பார். அவர் 58 இன்னிங்சில் 2102 ரன் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார்.



வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் ஆடாததால் அவரை ரோகித்சர்மா முந்தினார். 4-வது இடத்தில் இருக்கும் மேக்குல்லம்மை (நியூசிலாந்து) முந்த கோலிக்கு 39 ரன்களே தேவை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித்சர்மா, விராட்கோலி ஆகியோர் புதிய சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளனர். #AUSvIND #RohitSharma
Tags:    

Similar News