செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- கோலிக்கு, கங்குலி அறிவுரை

Published On 2018-08-05 22:40 GMT   |   Update On 2018-08-05 22:40 GMT
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார். #ENGvIND #ViratKohli #Ganguly
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் எழுதியிருப்பதாவது:-தோல்விக்கு அணியின் கேப்டனை விமர்சிப்பதும், வெற்றி பெற்றால் கேப்டனை பாராட்டுவதும் கிரிக்கெட்டில் சகஜம். தோல்வியால் துவண்டு போய் உள்ள இந்திய வீரர்களுக்கு விராட் கோலி புது நம்பிக்கை கொடுக்க வேண்டும். அவரால் மட்டுமே அவர்களது மனநிலையை மாற்ற முடியும்.

அவர் தங்கள் அணி வீரர்களுடன் உட்கார்ந்து பேச வேண்டும். என்னால் ரன் குவிக்க முடிகிறது என்றால் உங்களாலும் ஏன் முடியாது என்று எடுத்து கூற வேண்டும். களம் இறங்கி பயமின்றி விளையாடும்படி அறிவுறுத்த வேண்டும். அது மட்டுமின்றி அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று கங்குலி அதில் கூறியுள்ளார். #ENGvIND #ViratKohli #Ganguly
Tags:    

Similar News