செய்திகள்

எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் - முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 322/6

Published On 2018-07-25 19:14 GMT   |   Update On 2018-07-25 19:14 GMT
எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்ட முடிவில் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது.

இந்த ஆட்டம் நேற்று செல்ம்ஸ்போர்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முரளி விஜய், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தவான் டக் அவுட்டானார். புஜாரா 1 ரன் எடுத்த நிலையில ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 5 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து இறங்கிய ரகானே 17 ரன்னில் வெளியேறினார்.

ஒருபுறம்  விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் முரளி விஜய் நிலைத்து ஆடி அரை சதமடித்தார். இவர் 53 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். நிதானமாக ஆடிய விராட் கோலி 68 ரன்னில் ஆட்டமிழந்தார்.

லோகேஷ் ராகுலுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்தார்.

இதையடுத்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

எசக்ஸ் அணி சார்பில் கோல்ஸ், பால் வால்டர் ஆகியோர் 2 விக்கெட் வீழ்த்தினர். 
Tags:    

Similar News