செய்திகள்

ஐபிஎல் 2018 தொடரில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்களின் விவரம்

Published On 2018-05-27 20:36 GMT   |   Update On 2018-05-27 20:36 GMT
ஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடரின் 11வது சீசனில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளது. #IPL2018 #SpecialAwards
மும்பை:

11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி வாட்சனின் அதிரடியால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷேன் வாட்சன் வென்றார்.

மேலும், இந்த தொடரில் வீரர்கள் பெற்ற விருதுகளின் விவரம் வருமாறு:

எமர்ஜிங் பிளேயர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது ஆகியவற்றை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் கைப்பற்றினார்.



மொத்தம் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் ஆண்ட்ரு டைக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.

இதேபோல், 17 போட்டிகளில் 735 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.

சூப்பர் ஸ்டிரைக் வீரர் மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர் ஆகிய விருதுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் டிரெண்ட் போல்டுக்கு சிறந்த கேட்ச் பிடித்த வீரர் விருது வழங்கப்பட்டது.



இன்னவேடிவ் திங்கிங் வீரருக்கான விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனிக்கு வழங்கப்பட்டது.

மேலும், இந்த தொடரின் பேர் பிளே விருது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. #IPL2018 #SpecialAwards
Tags:    

Similar News