செய்திகள்

இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஐந்தாண்டுகளுக்கு பின்னர் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து

Published On 2018-05-02 11:52 GMT   |   Update On 2018-05-02 11:52 GMT
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது. #ICC #ODIRatings
துபாய்:

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில், முதலிடத்தில் இருந்த இந்திய அணி 1 புள்ளிகளை இழந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இரண்டாம் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி 4 புள்ளிகளை இழந்து மூன்றாம் இடத்திற்கு சென்றது.

வருடாந்திர புதுப்பித்தலின் அடிப்படையில் 2014-15 ஆண்டுகள் நடந்த போட்டிகள் கணக்கில் இருந்து நீக்கப்பட்டு, 2015-16 மற்றும் 2016-17 ஆண்டு போட்டி முடிவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இங்கிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி முதலிடத்தில் இருந்தது. அதன் பின்னர், ஐந்தாண்டுகளுக்கு பின்னர் அந்த அணி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகள் நடந்து வருவதால் இந்திய அணிக்கு தற்போது சர்வதேச போட்டிகள் எதுவும் இல்லை.

வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அந்நாட்டுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெரும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. 20 ஓவர் தரவரிசையை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி முதலிடத்திலும், இந்திய அணி மூன்றாமிடத்திலும் தொடர்கிறது. #ICC #ODIRatings
Tags:    

Similar News