செய்திகள்

இன்றைய ஆட்டத்தில் தவான் விளையாட வாய்ப்பு- புவனேஸ்வர் குமார் இல்லை

Published On 2018-04-24 07:02 GMT   |   Update On 2018-04-24 07:02 GMT
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் முன்னணி பந்து வீ்ச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆடமாட்டார். #SRH #IPL2018
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி, இரண்டில் தோல்வியடைந்துள்ளது.

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகுப் பகுதியில் லேசான வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இன்றைய போட்டியில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.



ஆனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் காரமாக ரிட்டையர்டு ஹர்ட் ஆன தவான் இன்று விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் ‘‘சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யூசுப் பதான் விளையாடுவாரா? என்று 100 சதவீதம் உறுதியாக கூற இயலாது. ஆனால் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News