செய்திகள்

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2018-04-16 08:58 GMT   |   Update On 2018-04-16 08:58 GMT
காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் 5 பேருக்கு ரூ.2.20 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். #CommonwealthGames2018
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், மேசைப்பந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சத்தியனுக்கு 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவிக்கப்படுகிறது.

மேசைப்பந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சரத்கமலுக்கு ரூ. 50 லட்சம்.

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சவுரவ் கோ‌ஷலுக்கு ரூ.30 லட்சம்.


ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வி ஜோஸ்னா சின்னப்பாவுக்கு 30 லட்சம் ரூபாய், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் தீபிகா கார்த்திக்குக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பதக்கம் பெற்றவர்களுக்கு தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #CommonwealthGames2018
Tags:    

Similar News