search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர்"

    • போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின்ட்ராஜ் (வயது 37). ராணுவத்தில் பணியாற்றிய இவர், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் டிஸ்மிஸ் செய்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு, நகைபறிப்பு போன்ற வற்றில் ஈடுபட்டுள்ளார். கொள்ளை, அடிதடி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டதாக இவர் மீது தக்கலை, திருவட்டார், மார்த்தாண்டம், கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் ஒரு சம்பவத்தின் போது இவர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் பழுதானதால், அதனை சாலையில் விட்டுச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்தனர். அதனை போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மார்த்தாண்டம் திக்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த மெர்லின்ட்ராஜை கைது செய்தனர். வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இதனால் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து மெர்லின்ட்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • கலெக்டர் கிறிஸ்துராஜ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இருந்து வழியனுப்பி வைத்தார்.
    • திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  66 விளையாட்டு வீரர் வீராங்கனைகளும்  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர்:

    முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் சென்னையில் நடைபெறுவதையொட்டி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 66 விளையாட்டு வீரர் வீராங்கனைகள்,  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர். அவர்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இருந்து வழியனுப்பி வைத்தார்.

    இது குறித்து கலெக்டர் தெரிவித்தாவது:-

    முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நாளை 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 பிரிவுகளில் சென்னையில் பல்வேறு விளையாட்டு அரங்கங்களில் நடைபெற உள்ளது.

    முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டு வீரர்களுக்கான சிலம்பம், கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  66 விளையாட்டு வீரர் வீராங்கனைகளும்  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள வீரர், வீராங்கனைகள் விளையாட்டு ப்போட்டிகளில் வெற்றி பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    பின்னர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து செல்லும் பேருந்தினை கொடியசைத்து வழிஅனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • 2 நாட்கள் நடக்கிறது
    • பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்பதற்கு தேர்வு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் வரை நடைபெற வுள்ள பல்வேறு வகை யான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ் நாடு அணிக்கான வீரர்கள், வீராங்க னைகள் தேர்வு கீழ்க்கா ணும் விளையாட்டுகள் விவரப்படி நடைபெற உள் ளது. தேர்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் விவரம் வருமாறு:-

    வருகிற 14-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர் லால் நேரு உள் விளையாட்ட ரங்கத்தில் கூடைப்பந்து போட்டிக்கு மாணவர்கள் 12 பேரும் மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் கால்பந்து போட்டிக்கு மாணவிகள் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு திருச்சி அண்ணா விளை யாட்டரங்கத்தில் வளை கோல்பந்து போட் டிக்கு மாணவர்கள் 18 பேர் தேர்வு செய்யப் பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளை யாட்டு அரங்கத்தில் கோ-கோ போட்டிக்கு மாணவிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட உள் ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங் கத்தில் கையுந்து பந்து போட் டிக்குமாணவர்கள் 12 பேரும், மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    வயது வரம்பை பொறுத் தவரையில் 1-1-2004 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்த விளையாட்டு வீரராக இருத்தல் வேண்டும். ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட். பள்ளியில் பயில்வதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றி தழ் (குறைந்தபட்சம்) 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தாக இருத்தல் வேண்டும். (அதாவது 2012 ஜனவரி மாதம் 1-ந் தேதி அல்லது அதற்கு முன் நக ராட்சி அல்லது கிராம பஞ்சாயத்தால் வழங்கப் பட்டது).

    தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்ட பின்னர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. தேர்வு போட்டிக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்க னைகள் தேர்வு நடை பெறும் இடங்களில் குறிப் பிட்ட நாளில் தகுந்த ஆவ ணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த மணக்கரை அவரிவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஐயப்பகோபு (வயது 46).

    எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையில் கடந்த 4-ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். ஐயப்பகோபுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஐயப்பகோபு போதையில் தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐயப்பகோபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி துர்கா (36) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசு சார்பில் தேசிய கொடியுடன் வரவேற்கும் குழுவில் இடம் பெற்றார்.
    • கல்வித்துறையினர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.

    அவிநாசி :

    அவிநாசியிலுள்ள ஸ்ரீ ரமணசேவா ஆஸ்ரமம் குழந்தைகள் இல்லத்தில் தங்கி அருண்பாண்டி, நவீன் மற்றும் கவுதம் ஆகியோர் சேவூர் மற்றும் கருக்கன்காட்டுப்புதூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    3 பேரும் 20ந் தேதி நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்றனர்.இதில் 16 வயது பிரிவில், நவீன் முதலிடம், கவுதம் இரண்டாமிடமும், 16-18 வயது பிரிவில், அருண்பாண்டி மூன்றாம் இடமும் பெற்றனர்.இதனை தொடர்ந்து 25ம் தேதி அரசு பள்ளிகளிடையே மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் அருண்பாண்டி முதலிடம் பிடித்தார்.இதனால் அருண்பாண்டி, சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களை தமிழக அரசு சார்பில் தேசிய கொடியுடன் வரவேற்கும் குழுவில் இடம் பெற்றார். இதற்காக அவரை கல்வித்துறையினர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.

    • சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
    • சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் பரமேஸ்வரி தம்பதியின் மகன் சன்மத் தர்ஷன். தடகள வீரர். இவர் குஜராத் மாநிலம் நாடியட்டில் நடைபெற்ற "20வது தேசிய பெடரேஷன் கப்" 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சேம்பியன்ஷிப் போட்டியில், சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா-வில் நடைபெற்ற 4வது கேலோ இந்தியா யூத் கேம்ஸ்தடகளப்போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.34 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    அதேபோல திருப்பூரை சேர்ந்த மரிய முத்துராஜா மற்றும் ஸ்டெல்லா ஜோஸப் தம்பதியரின் மகள் ஏஞ்சல் சில்வியா. தடகள வீராங்கனை. இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற "கிராண்ட் பிரிக்ஸ் 4" தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூரை சேர்ந்த தடகள வீரர்கள் இருவரையும் பாராட்டி கெளரவிக்கும் விதமாக திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவருமான சண்முகசுந்தரம் தலைமையில் ஐ.பி.எக்ஸ். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநருமான நிரஞ்சன், காவல் ஆய்வாளர் முத்துக்குமார்உள்ளிட்ட திருப்பூர் தடகள சங்க நிர்வாகிகள் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து விளையாட்டு சீருடைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினர். 

    • சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மாநில துணை பொது செயலாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு மறத்தமிழர்சேனை சார்பில் சுதந்திரபோராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 221-வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.

    மாநில துணை பொது செய லாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜவஹர்சிவா, மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்டசெயலாளர் முத்துகுமார், மூவேந்தர் முன்னேற்றகழக மாநில பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் கோட்டூர்சாமி வரவேற்றார். வாளுக்குவேலி உருவபடத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகி மகேந்திரன், அ.ம.மு.க. நகர செயலாளர் மதன், சுகுமாறன், தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மூவேந்தர் முன்னேற்றகழக வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி, வழக்கறிஞர் விஜயக்குமார், லயன்ஸ் நகரதலைவர் பாலாஜி, நாம்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஆனந்த், காங்கிரஸ் நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கச்சைகட்டி கிளை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    சென்னை பூந்தமல்லியில் உள்ள சிஆர்பிஎப் பயிற்சி மையத்தில் அதிகாரிகள் அளித்த தண்டனையால் மன உளைச்சல் ஏற்பட்டு ராஜேஷ்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். #CRPF
    சென்னை:

    சென்னை பூந்தமல்லியில் சிஆர்பிஎப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பணியாற்றிய ராஜேஷ் குமார் (40) என்ற வீரர் பணி நேரத்தில் செல்போனில் பேசியதால், அதிகாரிகள் தண்டனை அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனால், மன உளைச்சல் அடைந்த ராஜேஷ் குமார் இன்று தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×