செய்திகள்

கொல்கத்தா பவுலர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்

Published On 2018-04-16 04:23 GMT   |   Update On 2018-04-16 04:23 GMT
ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து கொல்கத்தா பவுலர்களுக்கு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#IPL #KKR #DineshKarthik
கொல்கத்தா:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த இலக்கை ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சனின் (50 ரன்) அரைசதத்தின் உதவியுடன் 19 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கொல்கத்தா மைதானத்தில் ஐதராபாத் சன்ரைசர்சின் முதல் வெற்றி (இதற்கு முன்பு 5 ஆட்டங்களில் தோல்வி) இது தான்.

தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘160 முதல் 170 ரன்கள் வரை எடுத்திருந்தால் பாதுகாப்பான ஸ்கோராக இருந்திருக்கும். இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ வகை பந்து வீச்சில் (விரல்களை மடக்கிய நிலையில் பந்தை பிடித்து வீசுவது) கலக்கினர். இந்த மாதிரி பந்து வீசுவதை எங்களது பவுலர்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்’ என்றார். #IPL
Tags:    

Similar News