செய்திகள்

இந்தியாவுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை வழங்கியது ஐ.சி.சி.

Published On 2018-02-25 11:04 GMT   |   Update On 2018-02-25 11:04 GMT
தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன் ஷிப் விருதுக்கான செங்கோல் கேப்டன் விராட் கோலியிடம் வழங்கப்பட்டது. #ICC #TeamIndia #ViratKohli
கேப்டவுன்:

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா ‘நம்பர்-1’ இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து இந்திய அணிக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் சாம்பியன் ஷிப் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கேப்டவுனில் நேற்று நடந்த 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன் ஷிப் விருதுக்கான செங்கோல் வழங்கப்பட்டது.

ஐ.சி.சி. சார்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பொல்லாக் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐ.சி.சி.யின் கடாயுதத்தை பெற்றுக் கொண்டார். இந்த விருதை பெற்ற 10-வது கேப்டன் கோலி ஆவார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதுடன் ரூ.6.47 கோடி பரிசு தொகையும் கிடைத்தது. #ICC #TeamIndia #ViratKohli
Tags:    

Similar News