என் மலர்

  நீங்கள் தேடியது "indian team"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல், கோலி, சூர்யகுமார், இஷான் கிஷன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
  • 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

  இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

  இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில், ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

  இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என பிசிசிஐ குறிப்பிடவில்லை. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடர் மற்றும் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பிடித்துள்ளார். ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல், கோலி, சூர்யகுமார், இஷான் கிஷன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

  டெஸ்ட் அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர் ), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.

  ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல். ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட். இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மார்ச்1 ம் தேதி தொடங்க உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
  • இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

  இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை நிகழ்த்தியது. எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. 300 ரன்னுக்கு மேல் வெற்றியை ருசித்த முதல் அணி இந்தியாவாகும்.

  இதற்கு முன்பு நியூசிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2008ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 290 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

  இந்திய அணி இதற்கு முன்பு 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இந்த வெற்றி வித்தியாசம் 6-வது இடத்தில் இருக்கிறது.

  ஆஸ்திரேலியா 275 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்கா 272 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும் வீழ்த்தி இருந்தது. இதே போல் தென் ஆப்பிரிக்கா 258 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.

  இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால் வீரர்களை குறை கூறுங்கள்.
  • இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல்.

  டெல்லி:

  அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு வீரர்களின் அணுகுமுறையும், ஐபிஎல் தொடருமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறந்த மாற்றம் ஐபிஎல் தொடர் தான் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது:-

  இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள்.

  ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.

  ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிக் பாஷ் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில், எத்தனை இந்தியர்கள் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள்.

  சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. ஆனால் நமது பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கு வந்து பல வெளிநாட்டு கிரிக்கெட்டர்கள் பணி செய்கிறார்கள். நமது நாட்டு வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்தியாவில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.

  பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். பிசிசிஐயின் 50% வருமானமே, கிரிக்கெட்டிற்கு போதுமானவை. அதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மீதமுள்ள 50% வருமானத்தை ஒதுக்கலாம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
  • 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

  மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

  இந்தநிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

  இந்த போட்டியில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

  இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு தற்போது டாஸ் போடப்பட்டது.

  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
   
  உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி  தலைமையிலான இந்திய வீரர்கள் சென்றனர்.

  இந்நிலையில், கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, சச்சின் தெண்டுல்கர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:  உலகக்கோப்பையின் ஒவ்வொரு ஆட்டத்திலும் அணியில் உள்ள மற்ற வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும். தனி ஒருவராக போராடினால் மட்டும் கோப்பையை வென்றுவிட முடியாது.

  இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுபவர்கள். அவர்கள் அணியில் எந்த இடத்தில் இறங்கினாலும் கவலையில்லை. போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி வீரர்களை களமிறக்குவது முக்கியமானது.

  தற்போதைய சூழ்நிலையில் உலகக்கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு நமக்கு மிகவும் அதிகமுள்ளது என தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.
  கொல்கத்தா:

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

  ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலியின் கேப்டன்ஷிப் செயல்பாட்டை இந்திய அணியின் கேப்டன்ஷிப்புடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துணைகேப்டன் ரோகித் சர்மா, டோனி ஆகியோர் அவருக்கு நல்ல ஆதரவாக இருப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருக்கிறார். அவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பாளராக இருப்பார்.

  இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும். இங்கிலாந்து மண்ணில் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பானதாகும். அங்கு 2017-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 2009-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி நன்றாகவே ரன் குவித்து வருகிறது.

  உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாகும். இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணியை, தற்போதைய இந்திய அணியுடன் ஒப்பிடக் கூடாது. இரு அணிகளும் வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்ததாகும். தற்போதைய இந்திய அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.

  இந்திய அணிக்கு நெருக்கடி இருப்பது நல்லது தான். நெருக்கடியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும். மற்ற அணிகளுக்கும் நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. உலக கோப்பை போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக் காது.

  இவ்வாறு கங்குலி கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார். #RaviShastri #ViratKohli
  துபாய்:

  உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  அணி தேர்வில் நான் தலையிடுவது கிடையாது. அணி தேர்வு தொடர்பாக ஏதாவது ஆலோசனை இருந்தால் கேப்டன் மூலம் தெரிவிப்பேன். உலக கோப்பை போட்டிக்கு 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்பதால் ஒரு சில வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டு போவார்கள். இது முற்றிலும் எதிர்பாராததாகும். நான் 16 வீரர்கள் வேண்டும் என்றேன். இந்த போட்டி நீண்ட காலம் கொண்டது என்பதால் 16 வீரர்கள் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்று நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) தெரிவித்து இருந்தோம். ஆனால் ஐ.சி.சி. 15 வீரர்களுக்கு தான் அனுமதி அளித்தது.

  அணிக்கு தேர்வாகாத வீரர்கள் மனவேதனை அடையக்கூடாது. இது ஒரு வேடிக்கையான விளையாட்டாகும். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் வாய்ப்பை இழந்த வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம். பேட்டிங்கில் 4-வது வீரர் வரிசையில் எப்பொழுதும் குறிப்பிட்ட வீரரை மட்டுமே இறக்கிக் கொண்டிருக்க முடியாது. அது அவ்வப்போது மாறுதலுக்குரிய இடமாக இருக்கும். முதல் 3 வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்ய முடியாது. ஆடுகளத்தின் தன்மை, எதிரணி ஆகியவற்றை பொறுத்தே 4-வது வரிசை வீரர் முடிவு செய்யப்படுவார்.  இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தையே அதிகம் நம்பி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்?. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாடுகளை பார்த்தால் எல்லா வடிவிலான ஆட்டத்திலும் இந்திய அணி ‘டாப்-3’ இடத்துக்குளேயே இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட (விராட்கோலி) வீரரையே நம்பி இல்லை என்பது உங்களுக்கு புரியும். இப்படி நிலையான வெற்றிகளை அணி பெறுவதற்கு பல வீரர்கள் எல்லா நேரங்களிலும் சீராக விளையாட வேண்டியது அவசியமானதாகும். நிலையான வெற்றியின் ஒட்டு மொத்த பெருமையும் அணியைத்தான் சாரும்.

  கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் உள்ளனர். அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். அதனால் இப்போதைக்கு உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக விளங்குகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் எந்த அணியையும், எந்த அணியாலும் வீழ்த்த முடியும். உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #RaviShastri #ViratKohli
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி வீரர்களை தேர்வு செய்கிறது. #AustraliaSeries #indiateam #viratkohli

  மும்பை:

  இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த சுற்றுப்பயணம் வெற்றி கரமாக அமைந்தது.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

  நியூசிலாந்து பயணத்தில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் முதல் முறையாக வென்றது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

  இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் போட்டி, மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

  20 ஓவர் ஆட்டம் வருகிற 24 மற்றும் 27-ந்தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூரில் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ந்தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லி ஆகிய இடங்களில் முறையே நடக்கிறது.

  ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி வீரர்களை தேர்வு செய்கிறது.

  இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. துணை கேப்டன் ரோகித்சர்மா தொடர்ந்து விளையாடி வருவதால் 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம்.


  இதேபோல தவானுக்கும், சில ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இடத்தில் கே.எல்.ராகுல், ரகானேக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

  நியூசிலாந்து பயணத்தில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் வீராட்கோலி அணிக்கு மீண்டும் திரும்புவார். 2-வது விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் ரி‌ஷப் பண்ட்டுக்கும், தினேஷ் கார்த்திக்குக்கு இடையே போட்டி நிலவுகிறது. ரி‌ஷப் பாண்ட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் விளையாடாத பும்ரா அணிக்கு மீண்டும் திரும்புகிறார். வேகப்பந்து வீரர்களும், சுழற்பந்து வீரர்களும் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். #AustraliaSeries #indiateam #viratkohli

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெளிநாட்டு மண்ணில் இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். #IndianTeam #RaviShastri
  பிரிஸ்பேன்:

  ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் (புதன்கிழமை) பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது.

  அங்கு நேற்று நிருபர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம், ‘தென்ஆப்பிரிக்கா (1-2) மற்றும் இங்கிலாந்தில் (1-4) டெஸ்ட் தொடரை தாரைவார்த்த நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது எந்த அளவுக்கு இந்தியாவுக்கு முக்கியமானது’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது சற்று கோபித்துக் கொண்டார்.

  “வெளிநாட்டு தொடர்களில் இந்தியா மட்டுமே தோல்வி அடைவது போல் கேள்வி கேட்கிறீர்கள். சமீப காலமாக நடந்த வெளிநாட்டு தொடர்களை உற்று பார்த்தால், பெரும்பாலான அணிகள் வெளிநாட்டில் சோபிக்கவில்லை என்பது தெரியும். 1990-களில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. 2000-ம் ஆண்டு வரை அந்த அணி வெளிநாட்டிலும் வெற்றிகளை குவித்தது. அதே போல் தென்ஆப்பிரிக்காவும் சில ஆண்டுகள் அசத்தியது. இவ்விரு அணிகளையும் தவிர்த்து கடந்த 5-6 ஆண்டுகளில் எந்த அணி வெளிநாட்டில் சாதித்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம். பிறகு இந்தியாவை மட்டுமே ஏன் குறி வைத்து கேட்கிறீர்கள்?” என்றார்.

  மேலும் ரவிசாஸ்திரி கூறுகையில் ‘வெளிநாட்டு போட்டி தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் முக்கியமான தருணத்தில் கோட்டை விட்டோம். அது குறித்து அணி கூட்டத்தில் விரிவாக விவாதித்து இருக்கிறோம். இவ்விரு தொடரின் முடிவுகளும் உண்மையான தாக்கத்தை பிரதிபலிக்கவில்லை என்றே சொல்வேன். ஏனெனில் உண்மையிலேயே சில போட்டிகள் நீயா-நானா? என்று கடும் நெருக்கமாக நகர்ந்தது. சில முக்கிய கட்டத்தில் தடுமாறியதால் தொடரை இழக்க வேண்டியதாகி விட்டது’ என்றார்.

  ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி விட்டதா? என்ற இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த சாஸ்திரி, ‘நான் அப்படி நினைக்கவில்லை. உள்ளூரில் எந்த அணியும் வலு குறைந்தது கிடையாது என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வரும் போது 3-4 வீரர்கள் விளையாட முடியாமல் போவது உண்டு. ஆனாலும் யாரும் இந்தியா பலவீனமான அணி என்று சொன்னது இல்லை. மற்றவர்களின் கருத்து குறித்து எனக்கு கவலை இல்லை. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நன்றாக செயல்பட்டால், எந்த அணிக்கு எதிராக ஆடுகிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல’ என்றார்.

  இந்திய பந்து வீச்சு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, ‘கடந்த காலங்களில் நாங்கள் பார்த்தது போலவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இருக்கும் பட்சத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பவுலிங் செய்வார்கள். ஒரு அணியாக அனைவரும் உடல்தகுதியுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

  ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (காயத்தால் அவதிப்படுகிறார்) இல்லாதது உண்மையிலேயே பின்னடைவு தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவர் இருந்தால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்த்துக் கொள்ள முடியும். இப்போது இரண்டு விதமாக யோசிக்க வேண்டி உள்ளது. அவர் விரைவில் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று நம்புகிறேன். அதே சமயம் இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஜொலித்தால், ஹர்திக் பாண்ட்யா இல்லாத குறை பெரிய அளவில் தெரியாது.’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெளிநாட்டில் விளையாடும் போது, அந்த தொடர் நிறைவடையும் வரை மனைவி மற்றும் குடும்பத்தாரை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளார். #ViratKohli #IndianPlayer
  புதுடெல்லி:

  இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் 2 வாரங்கள் வரை மட்டுமே தங்களது மனைவி அல்லது காதலியை தங்களுடன் தங்கவைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் புதிய விதியை அமல்படுத்தியது.

  இந்த நிலையில் இந்த விதியை மாற்றி, வெளிநாட்டில் விளையாடும் போது, அந்த தொடர் நிறைவடையும் வரை தங்களுடன் மனைவி மற்றும் குடும்பத்தாரை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் சார்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய கோரிக்கை வைத்துள்ளார்.

  இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தரப்பில் கேட்ட போது, ‘வெளிநாட்டு பயணத்தின் போது தொடர் முடிவடையும் வரை மனைவியை உடன் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை வைத்துள்ளது உண்மை தான். ஆனால் அது குறித்து தற்சமயம் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு அவர்களின் முடிவுக்கு விட்டுவிடப்போகிறோம். அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறையில் இப்போது எந்த மாற்றமும் இருக்காது’ என்று தெரிவிக்கப்பட்டது.இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த வெளிநாட்டு பயணம் நவம்பர் 21-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி 20 ஓவர் போட்டி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.  #ViratKohli #IndianPlayer 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print