செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் லாராவை முந்தினார், கோலி

Published On 2018-02-21 04:12 GMT   |   Update On 2018-02-21 04:12 GMT
சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளினார் விராட் கோலி. #ICC #Cricket #Kohli #ViratKohli #BrianLara
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் விராட் கோலி 909 புள்ளிகளுடன் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். எல்லா காலத்திலும் சேர்த்து ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 935 புள்ளிகள் (1985-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாகும்.

ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் எடுத்தவர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ் (931 புள்ளி) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல் (921 புள்ளி) 3-வதுஇடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் கோவர் (919 புள்ளி) 4-வது இடத்திலும்,

ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ் (918 புள்ளி) 5-வது இடத்திலும், பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் (910 புள்ளி) 6-வது இடத்திலும் உள்ளனர். இதற்கு அடுத்து 7-வது இடத்தில் கோலி இருக்கிறார். இதுவரை 908 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா, கோலியின் வருகையால் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். #ICC #Cricket #Kohli #ViratKohli #BrianLara #ICCRankings
Tags:    

Similar News