search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி தரவரிசை"

    • டெஸ்ட் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது.
    • இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    துபாய்:

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, தொடரை 1-1 என சமன் செய்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 1 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி 117 ரேட்டிங் உடன் 2-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி 4-வது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் சுப்மன் கில் 2-வது இடத்திலும், இந்திய அணியின் விராட் கோலி 3-வது இடத்திலும், ரோகித் சர்மா 4-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 6வது இடத்திலும் உள்ளனர்.

    அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 7-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 8-வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 9-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    • 3-வது இடத்தில் ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), ஹசரன்கா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    20 ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதலிடத்தை பிடித்து இருந்தார்.

    இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பந்து வீச்சாளர் தரவரிசையில் ரவி பிஷ்னோயுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் இணைந்து முதலிடத்தை பிடித்தார். இருவரும் 692 புள்ளிகளுடன் உள்ளனர். இதே போல் 3-வது இடத்தில் ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), ஹசரன்கா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.


    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (787), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் (758) உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காள தேசத்தின் ஷகீப்-அல்-ஹசன் 272 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (210), 4-வது இடத்தில் இந்தியாவின் ஹர்த்திக் பாண்ட்யா (200) உள்ளனர்.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவின் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5வது இடத்தில் உள்ளனர்.

    இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 10வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி காக் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்தில் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 7வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 8வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 10வது இடத்திலும் உள்ளனர்.

    • அப்ரிடி 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.
    • டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அப்ரிடி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.

    டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சிராஜ் 3-வது இடத்திலும் குல்தீப் 7-வது இடத்தில் உள்ளனர். பும்ரா 11-வது இடத்தில் தொடர்கிறார்.

    முதல் இடத்தை பிடித்துள்ள அப்ரிடி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பாவுடன் இணைந்துள்ளார். இருவரும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    • ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
    • இந்திய அணி 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்தன.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

    அதில், பாகிஸ்தான் அணி மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திற்கு சரிந்தது. அந்த அணி உலக கோப்பை தொடருக்கு முன் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேற இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

    இந்திய அணி தற்போது தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது.

    வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றினால் உலக கோப்பை தொடரில் இந்திய அணி நம்பர் 1 அணியாக வலம் வரும்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.
    • ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை எட்டியது.

    புளோம்பாண்டீன்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா (121 புள்ளி) மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்டதால் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

    பாகிஸ்தான் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 106 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இருக்கிறது.

    இவ்விரு அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    • ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.
    • 5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இருந்த ஃபகார் ஜமான் 2 இடங்கள் பின் தங்கி 5-வது இடத்தை பிடித்தார்.

    5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து 9-வது இடத்தில் விராட் கோலியும் 11-வது இடத்தில் ரோகித் சர்மாவும் நீடிக்கிறார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

    டி20-யை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரேஒரு இந்தியர் மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் 143 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தாலும் அவர்களின் இடம் உறுதியாக இல்லை.
    • ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 121 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது.

    மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது நாளில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 20-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் தற்போது, ஐசிசி தரவரிசையின்படி, இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக உள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தாலும் அவர்களின் இடம் உறுதியாக இல்லை.

    ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 121 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றால் முதல் இடத்தை பிடிக்கும். மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் ஜூலை 19-ம் தேதி மான்செஸ்டரிலும், நான்காவது ஆஷஸ் ஜூலை 27-ம் தேதி ஓவல் மைதானத்திலும் தொடங்கும்.

    இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால், ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும்.

    வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தால், பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி முதல் இடத்தைப் பெற இரண்டு வழிகள் உள்ளன.

    1. ஆஷஸ் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்து தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றினால்.

    2. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என வென்றால் போதுமானது.

    • நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார்.
    • ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடியதால், அவர் 887 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பின்தங்கினார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2ம் இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 4வது இடத்திலும் உள்ளனர். டாப்-10 பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளார். இந்திய வீரர் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 12வது இடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 8வது மற்றும் 9வது இடங்களில் நீடிக்கின்றனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 2வது இடத்திலும், அக்சர் பட்டேல் 4வது இடத்திலும் உள்ளனர்.

    • ஒருநாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடத்திலும், இங்கிலாந்து 2-வது இடத்திலும் உள்ளது.
    • இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    துபாய்:

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனால் புள்ளிப்பட்டியலில் அந்த அணி இந்திய அணியை விட 1 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி 105 ரேட்டிங் உடன் 5-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி 6-வது இடத்தில் நீடிக்கிறது. வங்காளதேசம், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    ×