செய்திகள்

எனது வேலையை மஹி பாதியாக குறைத்து விடுகிறார்: சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்

Published On 2018-02-02 05:56 GMT   |   Update On 2018-02-02 05:56 GMT
பந்துவீச்சின் போது எனது வேலையை மஹி (தோனி) பாதியாக குறைத்து விடுகிறார் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். #SAvsIND #kuldeepyadav
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதற்கிடையே, இந்தியா - தென்ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசினார். 10 ஓவரில் 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்துள்ளார்.

இந்நிலையில், பந்துவீச்சின் போது எனது வேலையை மஹி (தோனி) பாதியாக குறைத்து விடுகிறார் என இந்திய சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தென் ஆப்ரிக்காவில் விளையாடுவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. ஆனாலும் விராட் கோலி மற்றும் மஹி (தோனி) ஆகியோர் தலைமை பொறுப்பில் இருந்தாலும் அணியின் வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

சுழல் பந்து வீச்சாளரான எனக்கு மஹி 50 சதவீத வேலையை எளிதாக்கி விடுகிறார். நிறைய ஆட்டங்கள் ஆடியுள்ள அனுபவத்தால் ஒவ்வொரு பேட்ஸ்மேன் பற்றியும் தெரிந்து வைத்துள்ளார்.

ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் கூடுதலாக ஒரு விக்கெட்டை கைப்பற்ற வேண்டும், குறைந்தது 10 ரன்களையாவது கட்டுப்படுத்த வேண்டும் என் கேப்டன்கள் கூறுகையில், எந்த வீரருக்கும் அது புத்துணர்ச்சியை நிச்சயம் அளிக்கும். நானும் சாஹலும் கடந்த 5 ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். எனக்கும் சாஹலுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. 

டூ பிளசிஸ் - மாரிஸ் ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மாரிசை அவுட் ஆக்காமல் இருந்தால் அந்த அணி 290 அல்லது 300 ரன்களை நிச்சயம் தொட்டிருக்கும். எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிகளவில் ரன்கள் எடுப்பதை கட்டுப்படுத்துவதையே விரும்புவேன். 

இவ்வாறு அவர் கூறினார். #SAvsIND #kuldeepyadav #tamilnews
Tags:    

Similar News