search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் ஒருநாள் போட்டி"

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    பார்படாஸ்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்தார்.

    வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேசியதாவது:

    அணி நிர்வாகம் முதலில் பந்து வீசி பெரிய இலக்கை பின்னால் துரத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மோசமாக மாறியது.

    வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என மூவருக்குமே ஆடுகளம் சாதகமாகதான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை இவ்வளவு குறைந்த ரன்களில் நாங்கள் சுருட்டுவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பல வீரர்கள் திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தோம்.

    114 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டியது என்பது எங்களுடைய பந்துவீச்சாளர்களின் சிறப்பாக செயல்பாட்டை காட்டியது. உலக கோப்பை தொடருக்கு முன்பு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என நினைத்தோம்.

    நான் என்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கினேன். அதன் பிறகு இப்போதுதான் அந்த இடத்தில் விளையாடினேன்.

    முகேஷ் குமார் முதல் போட்டியில் நன்றாகவே பந்து வீசினார். டெஸ்ட் போட்டியிலும் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். இசான் கிஷனுடைய பேட்டிங்கும் நல்ல முறையில் இருந்தது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்தான் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்களில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இந்தியா 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பார்படாஸ்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 19 ரன்னிலும், பாண்ட்யா 5 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 46 பந்தில் ஒரு சிக்சர், 7 பவுண்டரி உள்பட அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 16 ரன்னும், ரோகித் சர்மா 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்களில் சுருண்டது.
    • இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பார்படாஸ்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடக்கிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கியதௌ. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியின் ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
    • கெயில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கான டான் போடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக பிரான்டன் கிங் மற்றும் கெயில் மேயர்ஸ் களமிறங்கினர். இதில், கெயில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அலிக் அத்தனாஸ் விளையாடி வருகிறார்.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
    • தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதலில் மளமள என விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.

    அந்த அணி 54 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

    நிஷான் மதுஷ்கா 4 ரன்னிலும், குஷால் மெண்டிஸ் 12 ரன்னிலும், கருணா ரத்னே 29 ரன்னிலும், ஷாஹீன் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.

    சண்டிமல் ஒரு ரன் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

    ஐந்தாவது விக்கெட்டிற்கு மேத்யூஸ் உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரை சதம் அடித்து சிறப்பாக விளையாடினர்.

    மேத்யூஸ் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    ஆறாவது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வாவுடன் சமாராவிக்ரமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் ஆட்டம் வெகு நேரத்திற்கு பின் தொடங்கியது.

    66-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இலங்கை முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டு இழப்பிற்கு242 ரன்கள் எடுத்துள்ளது.

    தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம்லாதமும், 20 ஓவர் தொடருக்கு சான்ட்னரும் கேப்டனாக செயல்படுகிறார்கள்.

    இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நாளை (18-ந் தேதி) நடக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போதுதான் இலங்கையை 3 ஒருநாள் போட்டிகளிலும் வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி 'ஒயிட் வாஷ்' செய்தது.

    அதுவும் திருவனந்தபுரத்தில் நடந்த 3-வது போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் வென்று புதிய உலக சாதனை படைத்தது. விராட் கோலியும் சதத்துடன் பல சாதனைகள் புரிந்தார்.

    இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இந்த தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, சுப்மன் கில், சூர்ய குமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, பெர்குசன், பிலிப்ஸ், மைக்கேல், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 114-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 113 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி 'டை' ஆனது. 7 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சூர்ய குமார் யாதவ், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரீகர் பரத்.

    நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), பின் ஆலன், பிலிப்ஸ்,ஹென்றி நிக்கோலஸ், கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டபி, பெர்குசன், ஆடம் மில்னே, மிச்சேல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லே, சோதி ஹென்றி.

    • அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 113 ரன்கள் அடித்தார்.
    • நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் 127 ரன்கள் குவித்தார்.

    டப்ளின்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் நியுசிலாந்து அணி விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கும் இடையே டப்ளினில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 113 ரன்கள் குவித்தார். கர்டிஸ் கேம்பர் 43 ரன்னும், ஆண்ட் மெக்பிரைன் 39 ரன்னும் அடித்தனர்.

    பின்னர் 301 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய விளையாடிய நியுஸிலாந்து அணியில் தொடக்க வீரர் மார்டின் குப்தில் 51 ரன்கள் எடுத்தார். க்ளென் பிலிப்ஸ் 38 ரன்கள் எடுத்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்த நிலையில், மறுபுறம் அதிரடி காட்டிய நியூசி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் 82 பந்துகளில் 127 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் அந்த அணி 49.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    ×