search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இஷான் கிஷன், குல்தீப் யாதவ் அபாரம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா
    X

    இஷான் கிஷன், குல்தீப் யாதவ் அபாரம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்களில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இந்தியா 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பார்படாஸ்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 19 ரன்னிலும், பாண்ட்யா 5 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 46 பந்தில் ஒரு சிக்சர், 7 பவுண்டரி உள்பட அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 16 ரன்னும், ரோகித் சர்மா 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    Next Story
    ×