என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    குல்தீப் யாதவ், ஜடேஜா அசத்தல் - முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 114 ரன்களில் சுருட்டியது
    X

    குல்தீப் யாதவ், ஜடேஜா அசத்தல் - முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 114 ரன்களில் சுருட்டியது

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்களில் சுருண்டது.
    • இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பார்படாஸ்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடக்கிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கியதௌ. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியின் ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    Next Story
    ×