செய்திகள்

இளம் பாகிஸ்தான் வீரர்களுக்கு டிராவிட் போன்ற பயிற்சியாளர் தேவை: ரமீஸ்ராஜா

Published On 2018-02-01 07:49 GMT   |   Update On 2018-02-01 07:49 GMT
பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு டிராவிட் போன்ற பயிற்சியாளர் தேவை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான ரமீஸ்ராஜா வலியுறுத்தி உள்ளார். #PakVsIND #U19WC #RahulDravid #RamizRaja
கராச்சி:

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதியில் பாகிஸ்தானை 203 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

இந்திய ஜூனியர் அணிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கிறார்.

இதற்கிடையே பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு டிராவிட் போன்ற பயிற்சியாளர் தேவை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான ரமீஸ்ராஜா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இளம் வீரர்களை தேர்வு செய்வதில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு வியக்கதக்க வகையில் இருக்கிறது. ஜூனியர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய வீரர்களின் பொறுமை என்னை கவர்ந்தது.



சுப்மன்கில் என்பவரிடம் இருந்து புதிய திறமை வெளிவந்துள்ளது. இவர்களை தயார்படுத்தி திறமையை வெளிக்கொண்டு வந்த பெருமை எல்லாம் டிராவிட்டையே சேரும். இந்திய இளம் வீரர்கள் அவரிடம் இருந்து நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள்.



இந்தியாவுடனான தோல்வியின் இடைவெளி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. எங்களது பேட்டிங், பீல்டிங்கை பார்ப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இல்லை. பாகிஸ்தானில் இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை அமைப்பு ரீதியாக மாற்ற வேண்டி உள்ளது. இதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளர் பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு தேவைப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News