செய்திகள்

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து இஷாந்த் சர்மா விடுவிப்பு; ரஞ்சியில் விளையாடுகிறார்

Published On 2017-11-16 14:19 GMT   |   Update On 2017-11-16 14:19 GMT
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள இஷாந்த் சர்மா, ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்கெதிராக விளையாடுவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று பேட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இதற்கான இந்திய அணியில் டெல்லி அணி கேப்டனான இஷாந்த் சர்மா இடம்பிடித்திருந்தார்.

ஆனால், கொல்கத்தா போட்டியில் ஆடும் லெவன் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாளை ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் சுற்று தொடங்குகிறது.

ரஞ்சி டிராபியில் விளையாடும் வகையில் கொல்கத்தா டெஸ்டில் இடம்பெறாமல் இருக்கும் இஷாந்த் சர்மாவை விடுவிக்க பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி இன்று அவரை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் நாளை டெல்லியில் நடைபெற இருக்கும் மகாராஷ்டிரா அணிக்கெதிரான போட்டியில் இசாந்த் சர்மா கலந்து கொள்ள இருக்கிறார்.



இந்திய அணிக்கு தேர்வாகும் வீரர்கள் பட்டியலில் இசாந்த் ஷர்மா இருந்ததால், கடந்த போட்டியில் விளையாடாமல் ஓய்வில் இருக்க பிசிசிஐ கேட்டுக் கொண்டது. இந்த போட்டி டெல்லி அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவரை விடுவித்துள்ளது. ஆனால், நாக்பூர் நடைபெற இருக்கும் 2-வது போட்டியின்போது இசாந்த் சர்மா இந்திய அணியில் இணைந்து கொள்வார்.
Tags:    

Similar News