search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கிரிக்கெட் அணி"

    • விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
    • நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார்.

    பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் விளையாட இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக பணியாற்றுகிறார்.

    இந்த நிலையில் கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    என் வாழ்நாளில் முதல் முறையாக இந்த உலகின் நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். விபத்தின் போது காயங்கள் பற்றி நான் அறிந்தேன். ஆனால் நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. யாரோ என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயம் குணமாக 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டரிடம் கேட்ட போது கூறினர். விரைவில் குணம் அடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

    • இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
    • இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர்.

    சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.

    இந்த 'லேண்டர்', இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர். அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.


    இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை.

    ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

    இதையடுத்து பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகாவும் தகவல்கள் வெளியாகின.

    ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதிலாக இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கான ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:-

    பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால், இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? காரணம் என்ன? அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகளா?

    ஐசிசி இந்த பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை. பாகிஸ்தான் ஒரு சிறிய அணி அல்ல. சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தது. இன்னும் முதல் மூன்று அணிகளில் ஒன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
    • இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.

    இந்தியாவின் ஜெர்சியில் ஆரம்பம் முதல் சஹாரா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் மாறிக் கொண்டே வந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பைஜூஸ் எம்பிஎல், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சராக இருந்தன.

    கடந்த ஆண்டு எம்பிஎல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து கில்லர் நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்தது. தற்போது அதனுடைய ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    விளையாட்டுப் பொருட்களின் ஜாம்பவானான அடிடாஸுடன் பிசிசிஐ பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. எல்லாம் சரியாக நடந்தால், ஜூன் 1-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் களமிறங்கும்.

    ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா டீம் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.65 லட்சம் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதம் அடிடாஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் ஆரம்பமாகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.

    • இலங்கைக்கு எதிரான நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
    • இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேரளா வந்துள்ளனர். இலங்கைக்கு எதிராக நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும், கோயில் வெளியே இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை.
    • 2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    மும்பை:

    இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி, முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 20 வீரர்களையும் இனிவரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

    ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை. அவரது கேப்டன்ஷிப் குறித்து அதிருப்தியான அம்சங்கள் எதையும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    ரோகித் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது கேப்டன்சி சாதனை சிறப்பாக உள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவுறுத்தல்களை பிசிசிஐ வழங்கி உள்ளது. மேலும், வரும் ஐபிஎல் சீசனில் விளையாடுவதை தவிர்க்கும்படி முன்னணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்படலாம்.

    • ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
    • பாகிஸ்தான் அணி 2021-ம் ஆண்டில் 20 வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது.

    ஐதராபாத்தில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சாதனை படைத்தது. இந்த ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். இதனால் ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

    இதற்கு முன்பு பாகிஸ்தான் அணி 2021-ம் ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 20 வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது. அதை இந்தியா முறியடித்தது. இந்தியா இந்த ஆண்டில் இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் 29 ஆட்டத்தில் விளையாடி 21-ல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் இருக்கும் குரூப் போட்டோவில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இடம் பெற்றுள்ளது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. #ViratKohli #AnushkaSharma #TeamIndia
    லண்டன்:

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணி, தூதரகத்திற்கு சென்றது. 

    இறுதியாக ஒட்டுமொத்த அணியும், தூதரக கட்டிடத்திற்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டது. இந்த புகைப்படத்தில் பாலிவுட் நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் போஸ் கொடுத்தார். 

    இந்த போட்டோவை கண்ட ட்விட்டர் வாசிகள், அனுஷ்கா சர்மா என்ன இந்திய அணியில் ஒருவரா? அவர் ஏன் இந்திய அணியுடன் புகைப்படத்திற்கு போஸ் தருகிறார். பிசிசிஐ இதனை எப்படி அனுமதித்தது? மற்ற வீரர்களின் மனைவிகள் எங்கே? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  

    ஏற்கனவே வீரர்கள் தங்களது மனைவி, தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை குறைத்து, போட்டிகளில் கவனத்தை செலுத்துமாறு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 
    இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் போது ஆப்கான் வீரர்களையும் இந்திய வீரர்கள் கோப்பை வழங்கப்படும் போது அழைத்ததை பிரதமர் மோடி பாராட்டி பேசியுள்ளார். #MannKiBaat #PMModi #INDvAFG
    புதுடெல்லி:

    கடந்த வாரம் இந்தியா - ஆப்கானிஸ்தான் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதால், கோப்பை வழங்கப்பட்ட பின்னர், போட்டோவுக்கு போஸ் கொடுக்கையில், இந்திய அணி கேப்டன் ரஹானே, ஆப்கான் வீரர்களையும் அழைத்தார்.

    இந்த செயல் அனைவராலும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், இன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்திய அணியின் இந்த செய்கையை பாராட்டி பேசினார். சமுதாயத்தை ஐக்கியப்படுத்தவும், இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் விளையாட்டு சிறந்த வழியாகும் என அவர் கூறினார்.



    மேலும், ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடியதற்கு நாம் பெருமை பட வேண்டும். அந்த அணியின் வீரர் ரஷித்கான் உலக கிரிக்கெட்டின் சொத்து, அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தார் என மோடி பேசினார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சியாச்சின் உச்சி, போர்க்கப்பல்கள், ஆகாயம் மற்றும் நீர் என அனைத்து இடங்களிலும் நமது வீரர்கள் யோகா செய்தது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம் எனவும் மோடி கூறினார். 
    ×