செய்திகள்

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: லீக் போட்டியில் பெடரர், டிமித்ரோ, ஸ்வரெவ் வெற்றி

Published On 2017-11-13 18:00 GMT   |   Update On 2017-11-13 18:00 GMT
லண்டனில் நடைபெற்றுவரும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகளில் பெடரர், டிமித்ரோ, ஸ்வரெவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
லண்டன்:

பெடரர், நடால் உள்பட டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நேற்று (12-ம் தேதி)  தொடங்கியது.

இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், ஐந்தாம் நிலை வீரரான மரின் சிலிக்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஸ்வரெவ் 6-4, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.



மற்றொரு லீக் போட்டியில் நான்காம் நிலை வீரரான டொமினிக் தெய்ம், ஆறாம் நிலை வீரரான கிரிகொர் டிமித்ரோவை எதிர்கொண்டார். இப்போட்டியில், 6-3, 5-7, 7-5 என்ற செட்கணக்கில் டிமித்ரோ வெற்றி பெற்றார்.



முன்னதாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர், எட்டாம் நிலை வீரரான ஜேக் சாக்-உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் 6-4, 7-6 என்ற நேர் செட்களில் சாக்கை வீழ்த்தினார். 
Tags:    

Similar News