செய்திகள்

தெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார்: ஷேவாக் நம்பிக்கை

Published On 2017-09-17 09:00 GMT   |   Update On 2017-09-17 09:00 GMT
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார் என்று விரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக் கூறியதாவது:-

சச்சின் தெண்டுல்கர் போல் இன்னொரு வீரர் வருவார் என்று நாங்கள் நினைத்ததில்லை. ஆனால் அந்த மனநிலையை விராட் கோலி மாற்றிவிட்டார். தெண்டுல்கர் சாதனைகளை கோலி முறியடிப்பார் என நினைக்கிறேன். கோலிக்கு தற்போது 28 வயது தான் ஆகிறது.

அவரால் இன்னும் 10 ஆண்டுகள் விளையாட முடியும். இதனால் அவர் மிகப்பெரிய சாதனைகளை செய்ய முடியும். தெண்டுல்கர் சாதனைகளை முந்த முடியும். தெண்டுல்கர் பல சாதனைகளை படைத்து இருக்கிறார். எனது பெயரை மாற்றி கொள்ள வாய்ப்பு கிடைத்தால் தெண்டுல்கர் பெயரை வைத்து கொள்ள விரும்புவேன்.

அவர் கிரிக்கெட் கடவுளாக அழைக்கப்படுகிறார். அதுபோல கடவுளாக இருக்க யார் தான் விரும்பமாட்டார்கள். அவரது சாதனைக்கு நான் அருகில் கூட செல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News