search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷேவாக்"

    • 2010-ம் ஆண்டு நடந்த போட்டியில் சேவாக் 99 ரன்னில் கடைசி வரை களத்தில் இருந்தார்.
    • ஒரு ரன் தேவைப்படும் போது நோபால் போட்டதால் அவர் சதத்தை எட்டமுடியவில்லை.

    இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் பெரிய இலக்கை துரத்திய இலங்கை ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கிய போது வழக்கம் போல கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

    அதே வேகத்தில் சதத்தை நெருங்கிய அவர் கடைசி ஓவரில் 98 ரன்களில் இருந்த போது 4-வது பந்தில் இந்திய வீரர் முகமது ஷமி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். நடுவர் தீர்ப்பு வழங்குவதற்காக 3வது நடுவரை நாடினார்.

    இருப்பினும் அந்த சமயத்தில் கேப்டன் ரோகித் சர்மா அதற்கு மறுப்பு தெரிவித்து ஷமியை சமாதானப்படுத்தி அவரது வாயாலேயே அவுட்டை வாபஸ் பெற வைத்தார். மேலும் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்களை எடுத்த சனாக்காவை அவுட் செய்வதற்கு அது சரியான வழியல்ல என்றும் போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா தெரிவித்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைத்தது. அதனால் நெகிழ்ச்சியடைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிகழ்வின் புகைப்படத்தை பதிவிட்டு பாராட்டியது.

    அதே போல் ஜெயசூர்யா, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற நிறைய முன்னாள் இலங்கை வீரர்களும் ரசிகர்களும் ரோகித் சர்மா மற்றும் இந்தியாவின் அந்த செயலை மனதார பாராட்டினார்கள். ஆனால் அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2010-ம் ஆண்டு இலங்கை அணியினர் செய்த காலத்திற்கும் அழிக்க முடியாத நிகழ்வை நினைவு கூர்ந்து பதிலடி கொடுத்தனர்.

    அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தம்புலாவில் நடைபெற்ற 3-வது போட்டியில் இலங்கை 170 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய இந்தியாவுக்கு வழக்கம் போல அதிரடியாக விளையாடிய சேவாக் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 99* (100) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

    குறிப்பாக கடைசி நேரத்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது வழக்கம் போல சிக்சரைப் பறக்க விட்ட சேவாக் ஆசையுடன் பேட்டை உயர்த்தி சதத்தை கொண்டாடினார். ஆனால் அந்த பந்தை அம்பையர் நோ-பால் என்று அறிவித்ததால் கடைசியில் 99* ரன்கள் மட்டுமே எடுத்த அவர் சதத்தை புள்ளிவிவரங்களின் படி எட்ட முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தார்.

    அதை விட அந்தப் பந்தை ரிப்ளையில் பார்க்கும் போது அதை வீசிய சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே சதமடிக்க கூடாது என்பதற்காக வெள்ளை கோட்டை விட வெகு தூரம் காலை வைத்து நோ-பால் வீசியதும் அதற்கு இலங்கையின் ஜாம்பவானாக கருதப்படும் கேப்டன் குமார் சங்ககாரா பந்தை வீசுவதற்கு முன்பாகவே திட்டம் போட்டுக் கொடுத்ததும் அம்பலமானது.

    அப்படி சதமடிக்க விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தீட்டப்பட்ட திட்டத்தை நேற்று நினைத்திருந்தால் இந்தியா நடுவர்களின் அனுமதியுடன் செய்திருக்கலாம்.

    ஆனால் செய்யாத நாங்கள் தான் இந்தியர்கள் இன்றும் இதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் இலங்கைக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இனிமேலாவது அது போன்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    ×