செய்திகள்

ஐ.பி.எல். கோப்பையை விநாயகர் கோவிலுக்கு கொண்டு சென்று ஆசி பெற்ற மும்பை இந்தியன்ஸ்

Published On 2017-05-22 10:54 GMT   |   Update On 2017-05-22 10:54 GMT
மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை விநாயகர் கோவிலுக்கு கொண்டு சென்று ஆசி பெற்றனர்.
மும்பை:

ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் ஐ.பி.எல். கோப்பையை மூன்றாவது முறை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்கு ஐ.பி.எல். கோப்பையுடன், 15 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஐ.பி.எல். வெற்றிக் கோப்பையானது மும்பையில் உள்ள பிரசித்திபெற்ற கோவிலான சித்திவிநாயகர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மும்பை அணி உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள், கோப்பையை பூசாரியிடம் கொடுத்தனர். அப்போது பூசாரி, கோப்பையை தொட்டு ஆசி வழங்கினார்.
Tags:    

Similar News