இந்தியா

கேரளாவுக்கு வந்த பிரான்சு நாட்டை சேர்ந்தவர் கொரோனாவுக்கு பலி

Published On 2022-07-05 05:30 GMT   |   Update On 2022-07-05 05:30 GMT
  • கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
  • இதுபோல பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுபோல பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் பிரான்சு நாட்டில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி கேரள சுகாதார அதிகாரிகள் தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News