இந்தியா

கேரளாவில் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published On 2022-06-05 06:12 GMT   |   Update On 2022-06-05 06:12 GMT
  • பள்ளிக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.
  • சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து பள்ளிக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.

இதேபோல் கொல்லம் மாவட்டம் கொட்டாக்கரா என்ற இடத்தில் உள்ள அங்கன்வாடியில் 8 மாணவிகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணம் உணவில் விஷத்தன்மையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவுப் பாதுகாப்பு ஆணையர் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News