இந்தியா

அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2024-02-11 10:30 GMT   |   Update On 2024-02-11 10:30 GMT
  • அழைப்பு வரவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.
  • லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

டெல்லி முதல்மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு மனைவி மற்றும் குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் செல்கிறார்.

அயோத்தி ராமர்கோவிலில் கடந்தமாதம் நடந்த கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து அதிக அளவிலான மக்கள் அங்கு சென்று வருகிறார்கள். கடந்த 22 -ந்தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.

 


மேலும் அவர் குடும்பத்துடன் அயோத்தி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட விரும்புவதாகவும் கூறி இருந்தார். கும்பாபிஷேக விழாவுக்கு பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர். 

கட்சி பேதங்களைக் கடந்து ஏராளமான தலைவர்களும் கூட ராமர்கோவிலுக்கு செல்கிறார்கள். உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ராமர் கோவிலுக்கு சென்றார்.

எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கோவிலுக்கு செல்லும் பயணத்தை இன்று புறக்கணித்தனர். பா.ஜ.க., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஓ.பி. ராஜ்பார் தலைமையிலான எஸ்.பி.எஸ்.பி., ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் அயோத்தி சென்றனர்.

Tags:    

Similar News