இந்தியா
கைது

பண மோசடி வழக்கில் மும்பை தொழில் அதிபர் கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2022-02-03 06:16 GMT   |   Update On 2022-02-03 06:16 GMT
ரூ.1,034 கோடி பண மோசடி தொடர்பாக மும்பை தொழில் அதிபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மும்பை:

குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிரவீன் ரவுத். இவரது நிறுவனம் மும்பை புறநகரான கோரேகான் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டது.

அவரது நிறுவனம் ரூ.1,034 கோடி நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பல்வேறு பில்டர்களிடம் இருந்து பெறப்பட்ட 1,034 கோடிக்கு கூடுதலாக வங்கி கடனையும் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

ரூ.1,034 கோடி பண மோசடி தொடர்பாக மும்பை தொழில் அதிபர் பிரவீன் ரவுத்திடம் அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பிறகு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

பின்னர் பிரவீன் ராவத்தை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் வருகிற 9-ந் தேதி வரை விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

Tags:    

Similar News